2000 மினி கிளினிக் திட்டத்தின் முதல் கிளினிக்கை சென்னை ராயபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் அமைகிறது. முதற்கட்டமாக 47 இடங்களில் அமைக்கப்படும். 20 இடங்களில் இன்று முதல் முதல் செயல்படத் தொடங்குகிறது.
இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இந்த மினி கிளினிக்கில் மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர் என தல ஒருவர் பணியில் இருப்பர்.
இங்கு, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதையும் கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு, பெரிய மருத்துவமைகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.