தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக, அதிமுக நேரடியாக மோதுகின்றனஇங்கு அதிமுக சார்பில் அமைச்சர் வேலுமணியும், திமுக சார்பில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதியும் களம் காண்கின்றனர்.இவர்கள் தவிர நடிகர் மன்சூர் அலிகானும் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார்.இதனால் கடந்த சில நாள்காக கோவை தொண்டாமுத்தூரில் முகாமிட்டிருந்த அவர் பொதுமக்களை கவரும் விதத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.இந்த நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதியில் தான் போட்டியிடவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் திடீரென அறிவித்துள்ளார்.இந்தத் தேர்தல் வேண்டாம் என்று சென்னை கிளம்பிவிட்டதாக குறிப்பிட்ட அவர் அமைச்சர் வேலுமணிக்கு ஒரு நல்ல பெயர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்