முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு ஓமலூர் தொகுதியில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகம் வெற்றி நடை போடும் தமிழகமாக இருக்கிறது இதை கேட்டாலே ஸ்டாலின் அலறுகிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ,மக்களுக்கான திட்டங்களை வகுத்துத் தந்தார் ,அதை புரட்சித்தலைவி ஜெயலலிதா செயல்படுத்தினார் . இதை நாடே பார்த்து வியந்தது. அவர்கள் வழியில் தற்போது அதிமுக அரசும் ஏழை மக்களுக்காக உதவி செய்து வருகிறது. ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது . இந்த தேர்தலில் திமுகவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். எப்போதும் அதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது இந்த ஓமலூர் தொகுதி தான். இது ஜெயலலிதாவின் கோட்டை ” என்றார்.