புலியகுளத்தில் பிரசாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி மக்கள் முன்னிலையில் பேசியதாவது:-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார். கடவுளை இழிவாக பேசியவர்கள் கையிலே கடவுள் வேலை கொடுத்த காட்சியை பார்க்கிறோம். ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார். அதிமுகவுக்குத் தான் வரம் கொடுக்கப் போகிறார்.
மு.க.ஸ்டாலின் உண்மையை சொல்லி வாக்கு கேட்டால், குறைந்தபட்சம் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்கும். ஏழை, எளிய மாணவர்கள் கல்வியில் உயர அடித்தளம் போட்டது அதிமுக அரசு. ஸ்டாலின் வெளியில் பேசுவது ஒன்று; உள்ளே இருப்பது வேறு ஒன்று.
கோவையில் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலை அமைக்க பிரதமரிடம் கோரிககை விடுத்துள்ளேன்.