நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அதிமுகவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து ஜெயக்குமார் கூறியதாவது; தரம் தாழ்ந்த விமர்சனங்களை ஏற்கமுடியாது. கொச்சையான, மோசமான வார்த்தைகளை பேசக்கூடியவர்கள் எங்கள் கட்சியிலும் உள்ளனர், ஆனால் அவ்வாறு பேசுவது முறையல்ல. பலகோடி ரூபாய் ஊழல் செய்த ஆ ராசாவுக்கு எங்களை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்