நீட் தேர்வுக்கு பதில் ‘சீட்’ தேர்வு- கமல்ஹாசன் வெளியிட்ட நவீன தேர்தல் அறிக்கை

Updated : Mar 19, 2021 14:35
|
Editorji News Desk

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற பெயரில் தேர்தல் அறிக்கை இருந்தது.

முன்னதாக தங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டார். அதில் கூறியிருப்பதாவது:-

1. ஊழலற்ற, நேர்மையான, விரைந்து செயல்படும் மக்கள் நலம் காக்கும் மக்களாட்சி கொடுக்கப்படும்.

2. விவசாயம் தொழில் உற்பத்தி மற்றும் சேவைத்துறை வளர்ச்சியை உயர்த்தி தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டில் 15 முதல் 20 சதவீத வளர்ச்சியை உறுதி செய்து ரூ.60-70 லட்சம் கோடியாக உயர்த்துவோம்.

3. 1 முதல் 2 கோடி பேருக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உறுதி செய்து, தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக உயர்த்தி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.

4. நதி நீர் இணைப்பு அதிதிறன் நீர்வழிச்சாலை, நீர் நிலை மேம்பாடு, தண்ணீர் மேலாண்மை அனைவருக்கும் சுத்தமான குடிநீர் மற்றும் நீலப்புரட்சி

5. விவசாயம், இயற்கையும், அறிவியலும் சார்ந்த நிரந்தரப் பசுமைப் புரட்சி, விவசாய பொருட்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் ஏற்றுமதி வரை உலக சந்தை மயமாக்கல், காடு வனம் அடர்த்தியாக வளர்க்கப்படும்.

6. மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி செய்யப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்பு பொருளாதார வளர்ச்சி.

7. கிராமப்புற சுய சார்பிற்கும், தொழிலுக்கும், விவசாயத்திற்கும் மதிப்பு கூட்டுதல், ஏற்றுமதிக்கும், வாழ்வாதாரத்திற்கும் மற்றும் மறுமலர்ச்சிக்கும், ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்த அப்துல்கலாம் புரா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

8. அரசு பள்ளிகல்வி உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும். அடிப்படை கல்வி, சீர்த்திருத்தம், பயிற்றுவிக்கும் முறை, பாடத்திட்டம் மாற்றம், மேல்நிலைக்கல்வி 9-10 வரை சீர்திருத்தம் செய்யப்படும். மாணவர்களின் படிப்பு சுமையும் குறைக்கப்படும்.

9. 1.3 கோடி பேருக்கு உலக தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு கொடுக்கப்படும்.

10. உயர்கல்வி- உலக தரம் வாய்ந்த ஆராய்ச்சி கல்வியாக மாற்றம், உலகத்தோடு போட்டி போடும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்.

11. தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளுக்கு தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ‘சீட்’ தேர்வு (SEET), அனைவருக்கும் உலக தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவ கல்வி, உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும்.

12. யுஎன்ஓ- அனைத்து தொழிலாளர் நல வாரியங்கள், நல மேம்பாட்டு வாரியங்களாக மாற்றியமைத்து அவர்களுக்க சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாடு உறுதி செய்யப்படும்.

Recommended For You

editorji | Partners

வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 6 நாள்களே ஆன குழந்தை மீட்ட எஸ்.பி.அபிநவ்

editorji | Partners

வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால்

editorji | Partners

பலகோடி மோசடி, செந்தில்பாலாஜி மீது குற்றப் பத்திரிகை

editorji | Partners

மயிலாடுதுறை பயங்கர வெடிச்சத்தம், இதுவே காரணம்

editorji | Partners

சச்சினுக்கு கொரோனா, சேவக், யுவராஜ் உஷார்