சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ., சார்பில் நடிகை குஷ்பு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அந்த தொகுதி பாமக.,விற்கு ஒதுக்கப்பட்டதால், ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை வேட்பாளராக அறிவித்தது பா.ஜ., தலைமை. இந்நிலையில், வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் இன்று (மார்ச் 18) குஷ்பு வேட்பு மனு தாக்கல் செய்தார்.