மயிலாடுதுறையில் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் கொள்ளிடம் ஆகிய இடங்களில், பயங்கர வெடி சத்தத்துடன் நில அதிர்வானது, உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்ற நிலையில், அதற்குப் பின் நில அதிர்வை உணர்ந்ததாகவும்,மக்கள் பயத்தில் வீடுகளிலிருந்து வெளியே வந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
மயிலாடுதுறை அடுத்த கோபங்குடி கிராமத்தில் கேட்ட பலத்த சத்தம் குறித்து வருவாய் துறை விளக்கமளித்துள்ளது,
இந்திய ராணுவ பயிற்சி வாகனத்தில் ஏர்லாக் விடுவிக்கும் போது இந்த சத்தம் ஏற்படுவதும் , இன்று மயிலாடுதுறை வழியே சென்ற ராணுவ பயிற்சி வாகனத்திலிருந்து சத்தம் வந்ததாகவும் ,
இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் வட்டாட்சியர் தெரிவித்துள்ளார் .