அஜித் பாடல்களுக்குத் தடை!
Updated : May 07, 2019 17:39
|
Editorji News Desk
நடிகர் அஜித் நடித்த வாலி, சிட்டிசன், வில்லன் உள்ளிட்ட 17 திரைப்படங்களின் பாடல்களை, எலெக்ட்ரானிக் மீடியாக்களில் ஒலிபரப்பு செய்ய சோனி மியூசிக் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பே - ஷோர் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், “வில்லன், வாலி, சிட்டிசன் உள்ளிட்ட 17 தமிழ்த் திரைப்படங்களின் ஆடியோ வெளியீட்டு உரிமையை அதன் தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கியுள்ளோம். ஆனால், சோனி மியூசிக் நிறுவனம், இப்படங்களின் பாடல்களை திங்க் மியூசிக், யூ-டியூப், கானா மியூசிக், விங்க் மியூசிக் போன்றவற்றில் பதிவிட்டு ஒலிபரப்புகிறது. இது காப்புரிமை சட்டத்தை மீறிய செயலாகும். எங்கள் நிறுவனத்தின் டிஜிட்டல் உரிமையை சோனி மியூசிக் தவறாகப் பயன்படுத்திவருகிறது. இது தொடர்பாக, சோனி மியூக்கிடம் விளக்கம் கேட்டும், உரிய பதில் அளிக்கவில்லை. ஆகவே, 17 படங்களின் பாடல்களை சோனி மியூக் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். சுந்தர், வில்லன், வாலி உள்ளிட்ட 17 படங்களின் பாடல்களை எலெக்ட்ரானிக் மீடியாக்களில் பயன்படுத்த சோனி மியூசிக்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
Recommended For You